Friday, March 20, 2026

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் மங்கள விக்ரமாராச்சி கடமையினைப் பொறுப்பேற்றார்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் மங்கள விக்ரமாராச்சி கடமையினைப் பொறுப்பேற்றார்..!
✍️ சர்ஜுன் லாபீர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………..
✅👉 அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி இன்று(12) காலை 09.21 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.
மத்துகமவைச் சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தினை சேர்ந்தவராவார். இவர் கல்முனை,மகாஒயா,உகண, பதியத்தலாவ,திகன ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராகவும், அனுராதபுரம் மோட்டார் வாகன திணைக்களத்தின் ஆணையாளராகவும் கடமையேறியுள்ளார்.
இவர் இறுதியாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப் பதவியேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன்,அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: