Saturday, February 14, 2026

ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் "ஹிஸ்புல்லாஹ் நூலகம்" மற்றும் "KMS ஸ்மார்ட் வகுப்பறை" திறந்து வைப்பு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியில் "ஹிஸ்புல்லாஹ் நூலகம்" மற்றும் "KMS ஸ்மார்ட் வகுப்பறை" திறந்து வைப்பு..!
✍️ எஸ். சினீஸ் கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 ஏறாவூர் பைசானுல் மதீனா அரபுக் கல்லூரியின் ஹிஸ்புல்லாஹ் நூலகம் மற்றும் KMS ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா, கல்லூரியின் பணிப்பாளர் அல்-ஆலிம் ஐ. அப்துர் றஹீம் நூரி அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (😎 சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு, நூலகம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், அரபுக் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மார்க்கக் கல்வியுடன் இணைந்து, தகவல் தொழில்நுட்பம், ஆங்கில மொழித் திறன் உள்ளிட்ட நவீன அறிவுத் துறைகளிலும் பயிற்சிகளை வழங்குவது காலத்தின் அவசியமாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இங்கு திறந்து வைக்கப்பட்ட "ஹிஸ்புல்லாஹ் நூலகம்" பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தந்தையின் பெயரில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
-- ஊடகப்பிரிவு

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: