𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் குடும்ப சகிதம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
நிகழ்வின் பிரதான அம்சமாக, க.பொ.த சாதாரண தர மாணவர்களின் கல்விப் பயணம், சாதனைகள் மற்றும் நினைவுகளைச் சுமந்த நினைவுமலர் வெளியிடப்பட்டது. அத்துடன், பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துக்களும், எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கைப் பாதைக்கான ஊக்குவிப்பு உரைகளும் வழங்கப்பட்டன.
அத்துடன் கல்முனை கல்வி வலய மேம்பாட்டிலும், பாடசாலை மேம்பாட்டிலும் அக்கறை செலுத்தி கல்விப்பணியாற்றிய கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தினாலும், இஸ்லாமாபாத் மக்களாலும் அமோக பாராட்டும் கௌராவிப்பும் இதன்போது நடைபெற்றது.
மேலும், பிராந்திய ஊடகபணியில் நீண்ட காலமாக சேவையாற்றி வருவதுடன் பாடசாலை மேம்பாட்டில் அக்கறை செலுத்தி வரும் அண்மையில் உபாலி விஜேவர்தன சிறப்பு தேசிய விருதை வென்ற அல்- மீஸான் பௌண்டஷன் தவிஷாளர், ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு கல்வி சமூகம் இதன்போது பாராட்டி கௌரவித்தது.
மேலும், கல்வி, ஒழுக்கம் மற்றும் பாடசாலைச் சேவைகளில் சிறப்பாகப் பங்களித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு, மாணவர்களின் மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் ஒரு முக்கியமான தருணமாக அமைந்ததாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குவதற்கும் இவ்வகையான நிகழ்வுகள் பெரும் ஊக்கமாக அமையும் என நிகழ்வில் உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் இந்நிகழ்வில் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவி திருமதி ஆரிக்கா காரியப்பர், அட்டாளைச்சேனை தேசிய கல்வியற்கல்லூரி விரிவுரையாளர் ஏ. சித்தி ரிஹானா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், வர்த்தகர் எம்.எச்.எம். முபாரிக் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
மேலும் பாடசாலை பிரதி அதிபர், பிரிவு தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், இஸ்லாமாபாத் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், இஸ்லாமாபாத் ஜனாசா நலன்புரி அமைப்பின் நிர்வாகிகள், யங் மௌன்ட் விளையாட்டு கழக நிர்வாகிகள், கல்வி ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் பெருமளவில் கலந்து கொண்டனர் .









0 comments: