Saturday, February 14, 2026

சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கினைப்புக் குழு கூட்டம்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கினைப்புக் குழு கூட்டம்..!
✍️ சர்ஜுன் லாபீர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇……
✅👉 சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (10) ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் ஒருங்கிணப்பில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம் தாஹீர், எம்.எஸ் உதுமாலெப்பை,கே.கோடிஸ்வரன்,
சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர்,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் பிரதேச செயலகத்தின்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பிரஜா சக்தி கிராம மட்ட செயற்திட்டங்களுக்கான அங்கிகாரம், அங்காடி வியாபரிகளுக்கான வியாபரத்திற்கான அனுமதி அத்தோடு சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள்,புனரமைப்பு செய்யப்படாமல் இருக்கும் வீதி பிரச்சினைகள்,வீதி ,சம்மாந்துறை வைத்தியசாலை காணி விவகாரம்,செந்நெல் கிராம,மல்வத்தை பிரதேச வைத்தியசாலையகளின் பிரச்சினைகள், சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள உள்ளக பிரச்சினைகள் குறிப்பாக தகவல் தொழில்நுட்ப படத்தினை ஆரம்பித்து வைப்பது சம்மந்தமான தீர்மானம்,மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு,வீரமுனை இந்துமயான பிரச்சினைக்கான தீர்வு,சம்மாந்துறை கல்வி வலய பாடசாலைகளின் பெளதீக மற்றும் உள்ளக சார்ந்த பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்,விவசாய காணி சம்மந்தமான பிரச்சினைகள்,நீர்ப்பாசன பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகளும்.தீர்வுகளும், கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன என்பதோடு இன்னும் பல முடிவுகளும் எடுக்கப்பட்டன குறிப்பிடத்தக்க விடயமாகும்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: