𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

…….
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், ஒழுக்கமும் உழைப்பும் வெற்றியின் இரு சிறகுகள் என்பதையும் வலியுறுத்தி உற்சாகமூட்டும் சிறப்புரையாற்றினார்.
அவரது உரை மாணவர்களின் மனதில் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் விதைத்தது.மேலும் இந்நிகழ்வில் அதிதிகளாக ஓய்வு பெற்ற கணித ஆசிரியர் சமட் அவர்கள், SDEC செயலாளர் ரியாஸ் அவர்கள், Multilac பிரதேச விற்பனை முகாமையாளர் தஸ்னிம் அவர்கள், பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் பிர்னாஸ் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை மேம்படுத்தினர்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், மாணவர்களின் சாதனைகளை பாராட்டியும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் இனிய அங்கமாக மாணவர்களின் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்று, அவர்களின் திறமைகள் மேடையேறின. பாடல்கள், நடனங்கள் மற்றும் சிந்தனைத் தூண்டும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தன.
O/L பரீட்சையை எதிர்கொள்ள உள்ள மாணவர்களுக்கு இந்நிகழ்வு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கும் ஒரு நினைவாக அமைந்தது. அவர்களின் கல்விப் பயணம் சிறப்புடன் தொடர இறைவனை வேண்டி, அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


















0 comments: