Tuesday, January 27, 2026

மாணவ சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்த லீடர் கிளாஸ்டர் ஹீரோஸ் – இரண்டாம் சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 மாணவ சாதனையாளர்களை பாராட்டி கௌரவித்த லீடர் கிளாஸ்டர் ஹீரோஸ் – இரண்டாம் சீசன் வெற்றிகரமாக நடைபெற்றது..!
✍️ மாளிகைக்காடு செய்தியாளர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் கல்வி, இணைச் செயற்பாடு மற்றும் ஒழுக்கத் துறைகளில் சிறப்பான சாதனைகளைப் புரிந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் “லீடர் கிளாஸ்டர் ஹீரோஸ் – இரண்டாம் சீசன்” நிகழ்வு சனிக்கிழமை (10) சிறப்பாக நடைபெற்றது.
அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.நூருல் ஹுதா உமர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையின் சாதனை மாணவர்கள் மேடையில் அழைக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மட்டுமல்லாது, சமூக பொறுப்புணர்வு, தலைமைத்துவ திறன் மற்றும் ஒழுக்க வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீனின் ஆலோசனை, வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாகவும் சிம்ஸ் கெம்பஸ் தவிசாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா, பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச். றியாசா, என். வரணியா, எம்.எல்.எம். முதரிஸ், ஏ.பி.எப். நஸ்மியா, எஸ். சுரேஷ், அஸ்மா அப்துல் மலிக் ஆகியோர் கௌரவ அதிதியாகவும், ஆசிரிய ஆலோசகர்களான எஸ்.எம்.எம். அன்சார், எம்.எம்.எம். றபீக் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், கல்வி அதிகாரிகள், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா பிரதிநிதிகள் கலந்து கொண்டு, மாணவர்களின் சாதனைகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
எதிர்காலத் தலைமுறையை திறமையான, ஒழுக்கமுள்ள சமூகத் தலைவர்களாக உருவாக்கும் நோக்குடன், இத்தகைய ஊக்குவிப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அல் மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்







SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: