Tuesday, January 27, 2026

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் – மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் – மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் சமூக சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாடசாலை மாணவர்களின் கல்வி தேவைகளை கருத்தில் கொண்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (16) நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயம்,கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் அனுசரணையில், நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயம்,அதிபர் ML. பதியுதீன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வு ரஹ்மத் பவுண்டேசனின் நற்பிட்டிமுனை இணைப்பாளர்களான பிரின்ஸ் பாலர் பாடசாலை அதிபர் MM.ரியாஸ் மற்றும் MI.நிறோஸ் (JP) அவர்களின் நேறிப்படுத்தலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன்.
நிகழ்வின் போது, அவர் மாணவர்களை நோக்கி ஊக்கமளிக்கும் உரையாற்றியதுடன், கல்வி என்பது ஒரு சமூகத்தின் நிலைத்த முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும் என வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, தனது பொற்கரங்களால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். மாணவர்களின் கல்வி பயணத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது ரஹ்மத் பவுண்டேசனின் முதன்மை நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள், சமூக முக்கியஸ்தர்கள், பெருந்திரளான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். அனைவரின் பங்களிப்பும் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்













SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: