Tuesday, January 27, 2026

அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு ரூ. 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு – நன்றி தெரிவித்த பாடசாலை நிர்வாகம்..!

Ad 728x90

🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு ரூ. 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு – நன்றி தெரிவித்த பாடசாலை நிர்வாகம்..!
✍️ எம்.என்.எம்.யாஸீர் அறபாத் (BA) ஓட்டமாவடி
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம்காரியப்பரின் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் பரிந்துரைக்கிணங்க, கொழும்பு 10, ஶ்ரீ தம்மத்த மாவத்தையில் அமைந்துள்ள அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இரண்டு மாடி கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக ரூ. 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பாடசாலை அதிபர் திரு. எம். எஸ். ஜெஸ்மின் தலைமையில் ஆசிரியர் குழாம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து, குறித்த நிதி ஒதுக்கீட்டிற்காக நன்றி தெரிவித்ததுடன், பாடசாலையை சார்ந்த பல்வேறு தேவைகள் மற்றும் விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர்களான அர்சாத் நிசாம்தீன் மற்றும் ரியாஸ் கபூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இச் சந்திப்பு, இன்று மாலை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: