Tuesday, January 27, 2026

“துணிந்தெழு” சஞ்சிகையின் 5ஆம் ஆண்டு நிறைவு விழா – கல்முனையில் எழுச்சியுடன் கொண்டாட்டம்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 “துணிந்தெழு” சஞ்சிகையின் 5ஆம் ஆண்டு நிறைவு விழா – கல்முனையில் எழுச்சியுடன் கொண்டாட்டம்..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 SKY தமிழ் மீடியா நிறுவனத்தின் முக்கிய வெளியீடாக விளங்கும் “துணிந்தெழு” சஞ்சிகையின் 5ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று (17) கல்முனை SLR Holiday மண்டபத்தில் மிகச் சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது.
சமூகத்தை எழுத்தின் வழி இணைக்கும் நோக்கில் பயணித்து வரும் “துணிந்தெழு” சஞ்சிகையின் ஐந்தாண்டு சாதனையைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கெளரவ வேதமுல்ல ,சமூக நல செயற்பாட்டாளர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர், தேசக்தி லங்கா பயிற்சி நிலையத்தின் தலைவர் ஜே.எம். ஹேமந்தி ஜயசுந்தர, தவிசாளர் புத்தி பிரதீப் நயதந்துபொல, மகப்பேறு நிபுணர் டாக்டர் எச்.எம். ரஸீன் முஹம்மட், சரிகமப புகழ் பாடகர் சுகிர்தராஜா சபேசன், வியூகம் தொலைக்காட்சி பணிப்பாளர் ஜனூஸ் சம்சுதீன், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நலீம், அதிபர் எம்.சி. ரிப்கா அன்சார் மற்றும் கலைஞர் திருமதி ஜெனிதா மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். இதனுடன் ஊடகவியலாளர்கள், சமூகப் பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பெருமளவில் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.
நிகழ்வின் போது கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் சிறப்பாக அரங்கேறின. அதிதிகளின் கருத்துரைகள் விழாவுக்கு மேலும் கண்ணியமும் அர்த்தமும் சேர்த்தன. இதனுடன், நிகழ்வின் ஒரு பகுதியாக அதிதிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அச்சமயம் “துணிந்தெழு” சஞ்சிகையின் புத்தக பிரதிகள் அதிதிகளிடம் மரியாதையுடன் கையளிக்கப்பட்டன.
ஐந்து ஆண்டுகளாக எழுத்து, சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வைத் தழுவிய பயணத்தை வெற்றிகரமாகக் கடந்து வந்த “துணிந்தெழு” சஞ்சிகையின் வளர்ச்சிப் பாதையை நினைவுகூரும், எதிர்கால இலக்குகளை வலியுறுத்தும் விழாவாக இந்நிகழ்வு அமைந்தது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






























SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: