


பாடசாலை முதல்வரின் வேண்டுகோளின் பேரில் 2003 ஆம் ஆண்டு பழைய மாணவராகிய ASM.Suath அவர்களின் முயற்சியினால் ஐக்கிய அரபு ராட்சியத்தின் தணவந்தர்களான அஷ்ஷெய்ஹ் யூசுப் அல்தமீமி, அஷ்ஷெய்ஹ் ஹமாத் அல் ஆமிரி, அஷ்ஷெய்ஹ் பலாஹ் அல் ஆமிரி ஆகியோரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
பாடசாலைக்கு அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற இச் சோளர் மின் இணைப்பிணை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் கேட்போர் கூடத்தில் பாடசாலயின் முதல்வர் ஜனாப். ML.பதியுதீன் சேர் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இப் பாடசாலையின் EPSI இணைப்பாளரும் ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளருமான ஜனாப். A. றியாஸ் அவர்களும், சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் ஜனாப். MHM. ஜவாத், பதியுத்தீன் வித்தியாலயத்தின் சிரேஷ்ட ஆசிரியர் ஜனாப். MB. நஸீப் அலாம், மிச்நகர் இல்மா வித்தியாலய அதிபர் ஜனாப். HM. முஹிஜிர், தாமரைக் கேணி ஸாஹிர் மௌலானா வித்தியாலய அதிபர். ALM. நௌபீ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சோளர் மின் இணைப்பு
2003 பழைய மாணவர்களினால் பாடசாலையின் அதிபர் அவர்களிடம் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் முன்னிலையில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நன்கொடையை வழங்கிய தனவந்தர்களுக்காவும், இதனை பெற்றுத் தருவதற்கு துணையாக நின்ற பழைய மாணவர்களுக்காவும் பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் மௌலவி ULM. ஹம்சா அவர்களினால் துஆப் பிராத்தணையும் இடம் பெற்றது.
அதிபர் அவர்களின் தலைமை உரையும் பழைய மாணவர்கள் சார்பாக மாவட்டப் பதிவாளர் ஜனாப். AMM.நபீஸ் அவர்களின் அறிமுக உரையும், பிரதம அதிதியின் விஷேட உரையும் இடம் பெற்றது.
அத்துடன் இந்நிகழ்வினை மேலும் சிறப்புற வைப்பதற்காக
தரம் 2 மாணவிகளின் கலை நிகழச்சி வகுப்பாசிரியர் திருமதி.நுஸ்ரத் ஜஹானி அவர்களின் வழிகாட்டலில் அனைவரினதும் பாராட்டுக்கள் கிடைக்கும் வகையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றதுடன் பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் ஜனாப். MIM. றிஸ்வான் அவர்களின் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.
தணவந்தர்களுக்கான நினைவுச் சின்னமும் அதிபர் ஆசிரியர், பாடசாலையின் அபிவிருத்தி நிறை வேற்றுக் குழு உறுப்பினர் ஆகியோரால் பாடசாலையின் 2003 பழைய மாணவர்களிடம் கையளிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
0 comments: