Friday, July 4, 2025

இஸ்லாமிய புது வருட முஹர்ரம் மாத தின நிகழ்வு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 இஸ்லாமிய புது வருட முஹர்ரம் மாத தின நிகழ்வு..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு அமைவாக இஸ்லாமிய புது வருட முஹர்ரம் மாத தின நிகழ்வுகள் 2025.07.01ம் திகதி இன்று கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் திரு ஏ.ஜி.எம் றிசாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகவும் பிரதம பேச்சாளராகவும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி அஷ்ஷேக் எஸ்.எம்.எம். மஷாஹிர் (நளீமி) அவர்களும் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் அஷ்ஷேக் யூ.எல்.றிபாய்டீன்( ஹாசிபி) அவர்களும் கலந்துசிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் தலைமை உரையினை பாடசாலையின் அதிபர் அவர்கள் நிகழ்த்தினார். அவர் உரையாற்றுகையில், இவ்வாறானதொரு நிகழ்வினைத் திட்டமிட்டு வடிவமைத்த இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாணவர்களின் இஸ்லாமிய கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு
சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.MI.சம்சுதீன் அவர்கள் ஊடகத் துறைக்காக ஆற்றிவரும் சிறப்பான பணிக்காக பாடசாலை அதிபர் மற்றும் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இந் நிகழ்வில் பிரதம அதிதியினால் எழுதப்பட்ட நூலின் பிரதிகள் அதிபர் மற்றும் நிகழ்வின் அதிதிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்














SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: