Friday, July 11, 2025

வாக்குறுதியை நிறைவேற்றி முதல் மாதக்கொடுப்பனவை மக்களுக்கே அன்பளிப்புச்செய்த பிரதேச சபை உறுப்பினர் ஏ.நளீர்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 வாக்குறுதியை நிறைவேற்றி முதல் மாதக்கொடுப்பனவை மக்களுக்கே அன்பளிப்புச்செய்த பிரதேச சபை உறுப்பினர் ஏ.நளீர்..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 பிந்தங்கிய பிரதேசமாகக்காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திலும் பிரதேச அபிவிருத்தியிலும், சமூக நல்லிணக்கத்திலும் அதீத அக்கரையுடன் செயற்பட்டு வரும் நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர் பிரதேச சபை உறுப்பினருக்கென கிடைத்த முதல் மாதக்கொடுப்பனவை சாளம்பைக்கேனி - 04 மூன்றாம் வட்டாரத்தில் ஒரு குடும்பத்திற்கு (09) அன்பளிப்புச்செய்துள்ளார்.
இங்கு கருத்து வெளியிட்ட நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர்; தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த கொடுப்பனவை மக்களுக்கே வழங்கும் நான் எனது பதவிக்கால சகல மாத கொடுப்பனவுகளையும் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு இணங்க பொதுமக்களுக்கே வழங்குவதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். அம்ஜத் தலைமையில் இடம்பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையுடைய குடும்பத்திற்கு குறித்த பணத்தொகையை கையளிக்கும் நிகழ்வில் ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி முஹமட் ரிஷ்வான் உட்பட பிரமுகர்கள், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: