Friday, July 4, 2025

காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெரிவு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெரிவு..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் காரைதீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று (25) மாலை நடைபெற்றது.
திறந்த முறையில் நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட சுப்பிரமணியம் பாஸ்கரனும், தேசிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட கிருஸ்ணபிள்ளை செல்வராணியும் போட்டியிட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் ஆகியோர் சார்பாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட கிருஸ்ணபிள்ளை செல்வராணிக்கு அதே கட்சியை சேர்ந்த எஸ். சுலட்சனா வாக்களித்தார். தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர் முன்மொழியப்பட்டிருந்தும் கூட அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஏ. பர்ஹாம் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
உப தவிசாளராக காரைதீவு பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் மாளிகைக்காட்டை சேர்ந்த எம்.எச்.எம். இஸ்மாயிலை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரித்தனர். போட்டிக்கு யாரும் முன்வராதமையால் சபையில் ஏகமனதாக எம்.எச்.எம். இஸ்மாயிலை உப தவிசாளராக அறிவிக்கப்பட்டர். இந்த அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. தாஹீர், எம்.எஸ். உதுமா லெப்பை, கே.கோடிஸ்வரன் உட்பட பிரமுகர்கள் உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: