

புதிய ம
ெய்வல்லுனர் சீருடை அறிமுகம்..!


எமது பாடசாலை விளையாட்டு பிரிவின் வேண்டுதலுக்கு இணங்க இம்முறை கோட்டமட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டி வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புதிய மெய்வல்லுனர் சீருடை MA SPORTS COMPLEX உரிமையாளர் MAM.அஸ்கான் அவர்களினால் பாடசாலை அதிபர் M. அப்துல் சலாம் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி அதிபர் ARM.முஸாதிக் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் MAMறியால்,AWM.ஆஸாட்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ் மெய்வல்லுனர் விளையாட்டு சீருடை அன்பளிப்புச் செய்த MA SPORTS COMPLEX உரிமையாளர் MA. அஸ்கான் அவர்களுக்கு பாடசாலை விளையாட்டுப் பிரிவு சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்…

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: