Thursday, May 1, 2025

மாவட்ட ரீதியாக மருத்துவத்தில் முதலாம் நிலை பெற்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சாதனை..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மாவட்ட ரீதியாக மருத்துவத்தில் முதலாம் நிலை பெற்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சாதனை..!
✍️ நூருல் ஹுதா உமர்
✅👉 இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் 10 மாணவிகள் மருத்துவ பீடத்துக்கு செல்ல தகுதி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட 1,4,28,35,37,43,49,60,63,67 ஆகிய நிலைகளை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் பெற்றுள்ளனர்.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நேற்று (26) வெளியீடு செய்யப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சை (2024) பெறுபேறுகளின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மருத்துவ பீடத்துக்கு 10 மாணவிகளும், பொறியியல் பீடத்துக்கு 03 மாணவிகளும், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பம் 16 மாணவிகளும், வர்த்தக பீடத்துக்கு 12 மாணவிகளும், முகாமைத்துவ பீடத்துக்கு 08 மாணவிகளும் கலை கலாசார பீடத்துக்கு 48 மாணவிகள் மற்றும் ஏனைய பீடங்கள் உள்ளடங்களாக சிறந்த சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கும் எமது பாடசாலைக்கு அதி சிறப்புச் சித்திகளை பெற்று பெருமை சேர்த்த மாணவிகளுக்கும், சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு பல்வேறு நெருக்கடியான சூழ்நிலையிகளில் அனைத்து வழிகளிலும் வழிகாட்டியாக இருந்து செயற்பட்ட கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS), பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்கள், மேலதிக கருத்தரங்குகள் கற்பித்த ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: