Ad 728x90
Ad 728x90
Ad 728x90

Friday, May 16, 2025

எங்களிடம் சமூக முன்னேற்றத்திற்கான சிறந்த திட்டங்கள் உளள்ளன. நிதிஉதவிகளை வழங்குமாறு மைமூனா அமையத்தின் தலைவர் என்.எம்.நௌஸாத் கோரிக்கை..!

எங்களிடம் சமூக முன்னேற்றத்திற்கான சிறந்த திட்டங்கள் உளள்ளன. நிதிஉதவிகளை வழங்குமாறு மைமூனா அமையத்தின் தலைவர் என்.எம்.நௌஸாத் கோரிக்கை..!

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 எங்களிடம் சமூக முன்னேற்றத்திற்கான சிறந்த திட்டங்கள் உளள்ளன. நிதிஉதவிகளை வழங்குமாறு மைமூனா அமையத்தின் தலைவர் என்.எம்.நௌஸாத் கோரிக்கை..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை மைமூனா அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கௌரவிப்பு நிகழ்வில் அமைப்பின் தலைவரும் சிரேஷ்ட மனநல ஆலோசகருமான என்.எம்.நௌஸாத் உரையாற்றும் போது ......
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனின் அச்சமுகத்திற்கு சீரான கல்வியை வழங்க வேண்டும் எனும் பிரதான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கல்முனை மைமூனா சமூக அபிவிருத்தி அமையம் பல்வேறு கல்விசார்ந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
ஒரு வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்தி இலக்கினை அடைந்து கொள்வதற்கு சிறந்த திட்டம், அதனை செயற்படுத்துவதற்கான ஆளணி, தேவையான நிதி ஆகிய மூன்றும் தேவை.எங்களது அமைப்பிடம் சிறந்த திட்டங்கள் உள்ளன. அதனை செயற்படுத்துவதற்கான பல்துறை சார்ந்த ஆளணியும் காணப்படுகிறார்கள் ஆனால் நிதி இல்லாமை என்பது மிகப்பெரிய குறைபாடாகும் சமூகத்திலுள்ள தனவந்தர்கள் மைமூனா அமையத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும் உரையாற்றுபோது பெண் ஜனாசாக்களை குளிப்பாட்டி கபனிடும் பயிற்சி வகுப்பானது சிறந்த உலமாக்களினால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தினூடாக ஆலிமாக்களைக் கொண்டு கற்பிக்கப்பட்டு செய்முறை பயிற்சியும் வழங்கப்படுகிறது.
எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இப்பயிற்சியைப் பெற்ற ஒரு பெண்மணி யை உருவாக்குவதே எங்களது நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் 2024/2025. G.C.E(A/L) பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் பாராட்ட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும் ஆனால் பொருளாதார நிலமை காரணமாக மாவட்டமட்டத்தில் 1ம் தரத்தில் சித்தியடைந்து மருத்துவபீடத்திற்கு தெரிவாகியுள்ள MN.பாத்திமா சப்ரின் எனும் மாணவியை மட்டும் இன்று பாராட்டி கௌரவிக்கின்றோம் என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
ரஹ்மத் பவுண்டேசன் மூலம் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசத்தில் குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!

ரஹ்மத் பவுண்டேசன் மூலம் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசத்தில் குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 ரஹ்மத் பவுண்டேசன் மூலம் சாய்ந்தமருது மற்றும் கல்முனை பிரதேசத்தில் குழாய்க்கிணறுகள் அன்பளிப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 சமீபகாலமாக நிலவி வரும் பொருளாதார பிரச்சினையின் காரணமாக அதிகரித்திருக்கின்ற நீர்க்கட்டணங்களினால் மிகுந்த அசெளகரியங்களுக்கு உள்ளாகி இருக்ககூடிய கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் மிகவும் தேவையுடைய சில பயனாளர்களை இனங்கண்டு இவ் அசெளகரியங்களை நிவர்த்தி செய்யும் முகமாக அவர்களுக்கான குழாய்க்கிணறுகள் YWMA பேரவையின் அனுசரணையில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்பின் பெயரில் மிகவும் குறுகிய நாட்களுக்குள் இக்குழாய்நீர்க்கிணறுகள் அமைக்கப்பட்டு பயனாளிகள் பாவனைக்காக திறந்து கையளித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்களுடன் குறித்த பயனாளர்கள் மற்றும் பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்



மெடிலேன்ட் வைத்திய சாலையின் ஸ்தாபகரினால் மாணவி MN.பாத்திமா சப்ரின் கௌரவிப்பு..!

மெடிலேன்ட் வைத்திய சாலையின் ஸ்தாபகரினால் மாணவி MN.பாத்திமா சப்ரின் கௌரவிப்பு..!

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மெடிலேன்ட் வைத்திய சாலையின் ஸ்தாபகரினால் மாணவி MN.பாத்திமா சப்ரின் கௌரவிப்பு..!
✍️ யூ.எல்.அலி ஜமாயில்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தில் நடைபெற்ற மைமூனாவின் கௌரவிப்பு விழாவில் மெடிலேன்ட் வைத்திய சாலையின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான அல்ஹாஜ் DR.SMA.அஸீஸ் அவர்களினால் அன்மையில் வெளியான 2024/2025ஆம் ஆண்டுக்கான G.C.E.(A/L) பரீட்சையில் உயிரியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 01தரத்தில் சித்தியடைந்து பெருமை தேடித்தந்த மாணவி MN.பாத்திமா சப்ரின் கௌரவிக்கப்பட்டார்.
மெடிலேன்ட் வைத்திய சாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஏற்பாட்டுக்குழு..!
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
புதிய மெய்வல்லுனர் சீருடை அறிமுகம்..!

புதிய மெய்வல்லுனர் சீருடை அறிமுகம்..!

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 புதிய மெய்வல்லுனர் சீருடை அறிமுகம்..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 எமது பாடசாலை விளையாட்டு பிரிவின் வேண்டுதலுக்கு இணங்க இம்முறை கோட்டமட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டி வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புதிய மெய்வல்லுனர் சீருடை MA SPORTS COMPLEX உரிமையாளர் MAM.அஸ்கான் அவர்களினால் பாடசாலை அதிபர் M. அப்துல் சலாம் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி அதிபர் ARM.முஸாதிக் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் MAMறியால்,AWM.ஆஸாட்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ் மெய்வல்லுனர் விளையாட்டு சீருடை அன்பளிப்புச் செய்த MA SPORTS COMPLEX உரிமையாளர் MA. அஸ்கான் அவர்களுக்கு பாடசாலை விளையாட்டுப் பிரிவு சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்…
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்