Monday, April 7, 2025

மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை இம்முறை எங்கள் வசமாகும் - மயில் வேட்பாளர் ஐயூப் உறுதி..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை இம்முறை எங்கள் வசமாகும் - மயில் வேட்பாளர் ஐயூப் உறுதி..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் போராளிகளாக இருந்து கட்சிக்கு உரமூட்டிய எங்களை பலிகொடுத்து எங்களின் ஊர்களுக்கு தேசிய காங்கிரஸ் தலைமையால் வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படாததால் மக்கள் இம்முறை தேசிய காங்கிரஸை நிராகரிக்க முடிவெடுத்துள்ளார்கள். அதனால் இசங்கணிச்சீமையில் ஒரு வேட்பாளரே கிடைக்காத நிலை அவர்களுக்கு உருவாகியுள்ளது. தேசிய காங்கிரஸ் வேட்பாளராக இசங்கனிசீமை வட்டாரத்தில் போட்டியிட வெளி வட்டாரத்தில் இருக்கும் ஒருவரை நிறுத்தியுள்ளார்கள். இவர்களுக்கு வாக்களிக்க இசங்கனிசீமை வட்டாரத்தில் யாரும் தயாராக இல்லை என அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்மை வேட்பாளருமான ரீ.எம். ஐயூப் தெரிவித்தார்.
(05) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் தலைமையால் அக்கரைப்பற்று பிரதேச சபை பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அதிலும் குறிப்பாக இசங்கணிச்சீமை வட்டார மக்களை முழுமையாக ஏமாற்றினார். இசங்கணிச்சீமை மாணவர்களின் கல்வி மேம்பாட்டு விடயங்களிலும், பள்ளிவாசல் காணி விடயங்களிலும் போலியான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றினார். அதுபோன்றே மக்களுக்கு போலியான விளம்பரங்களை செய்தார்களே தவிர உருப்படியாக எதுவும் செய்தபாடில்லை. கடந்த காலங்களில் அக்கரைப்பற்று பிரதேச சபையில் நடைபெற்ற சில்லறை விளையாட்டுக்களை மக்கள் இனியும் அனுமதிக்க மாட்டார்கள். மக்கள் இவர்களின் போலி முகங்கள் பற்றி தெளிவாக இருக்கிறார்கள்.
இம்முறை முஸ்லிங்களின் ஏகோபித்த தலைமையாக உருவெடுத்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் எம்.பி அவர்களின் கரங்களை பலப்படுத்தி எங்களின் வேட்பாளர்கள் மீது மக்களுக்கு இருக்கும் அதீத நம்பிக்கையின் காரணமாக அக்கரைப்பற்று பிரதேச சபையை மயில் அணியிடம் வழங்க மக்கள் முடிவெடுத்துள்ளார். இம்முறை மாற்றத்தை மக்கள் விரும்புவதால் அக்கரைப்பற்று பிரதேச சபை எங்கள் வசமாகும். நாங்கள் மக்கள் விரும்பும் ஆட்சியை முன்னெடுப்போம் என்றார்.


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: