Thursday, April 2, 2026

பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கல் மற்றும் பெருநாள் ஒன்றுகூடல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது..!

Ad 728x90

 



𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉










பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கல் மற்றும் பெருநாள் ஒன்றுகூடல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………..
✅👉 கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (ஜீ.எம்.எம்.எஸ்) மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்புப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வும், பெருநாள் ஒன்றுகூடல் கொண்டாட்டமும் இன்று (31) மாலை பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சமூக ஆர்வலர் ஏ.ஆர்.எம். ஹசீம் மற்றும் உபைத் லேர்னஸ் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். றிப்னாஸ் ஆகியோரின் ஒத்துழைப்பில் இந்த ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கப்பட்டன. இச்சாதனங்கள் பாடசாலையின் அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் கல்விசார் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், கல்வி வளர்ச்சியில் சமூக பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இத்தகைய உதவிகள் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரும் துணையாக அமையும் எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபீர், ஏ.எம். ஹஸீன், எம்.எச். ரியாஷா, என். வரணியா, அஸ்மா அப்துல் மலீக், கிழக்கு மாகாண கல்வி திணைக்கள பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.என்.ஏ. மலிக், ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் எம்.ஐ.எம். ரியாஸ், உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். ஆரீப், கிழக்கு மாகாண தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் நூருல் ஹுதா உமர், முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.ஐ. அப்துல் ஜப்பார், ஆசிரிய ஆலோசகரும், பாடசாலைக்கான வலயக்கல்வி அலுவலக இணைப்பாளருமான எஸ்.எம்.எம். அன்சார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அத்துடன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அசாம் அப்துல் அசீஸ், முஹம்மட் இர்சாத், பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்வில் உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வுடன் இணைந்து பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சி சமூக ஒற்றுமை, பகிர்வு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக அமைந்தது. மொத்தத்தில், கல்வி வளர்ச்சியையும் சமூக உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பங்கேற்ற அனைவராலும் பாராட்டப்பட்டதுடன், பாடசாலை சமூகத்திற்கு ஒரு நினைவாகும் சிறப்பான தருணமாகவும் அமைந்தது.

www.mihrajnews.com
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: