Friday, March 27, 2026

காரைதீவு பிரதேச சபையில் ஈரான் போரில் உயிரிழந்த மாணவர்கள், சிறுவர்களுக்கு மௌன அஞ்சலி..!

Ad 728x90

 

𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒

✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 காரைதீவு பிரதேச சபையில் ஈரான் போரில் உயிரிழந்த மாணவர்கள், சிறுவர்களுக்கு மௌன அஞ்சலி..!
✍️ நூருல் ஹுதா உமர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் இன்று (26) தவிசாளர் எஸ். பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிலையில், ஈரான் தொடர்பான போரினால் உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிறுவர்களின் நினைவாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.



இன்றைய மாதாந்த கூட்டம் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் இறுதியில், முன்னாள் உப தவிசாளரும் தற்போதைய சபை உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க, சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.
போரினால் பாதிக்கப்பட்ட நிர்பராத பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழப்பது மிகவும் வேதனையூட்டும் விஷயமாகும் எனவும், மனிதாபிமான அடிப்படையில் இவ்வஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், உலகளாவிய மோதல்கள் நிறுத்தப்பட்டு, மனித உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விருப்பமும் இவ்வஞ்சலியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டதாக முன்னாள் உப தவிசாளரும் தற்போதைய சபை உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வு, மனித உரிமைகள் மற்றும் உலக அமைதியின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக அமைந்தது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: